சீரியலில் நடிக்கும் சமுதாய ஆம்புலன்ஸ்!

,
 மக்கள் இயக்கமாக, மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட தமுமுக இன்றைக்கு தடுமாறி, தடம்மாறி சென்று விட்டதை எல்லோரும் அறிவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த இயக்கத்தில் இருக்கு யாருமே அரசியலில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி எடுத்து மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது இவ்வியக்கம்.

 
 
ஆனால், அரசியல் பதவி ஆசை ஏற்பட்ட காரணத்தால் கொள்கையை விட்டே வெளியேறி நான்காம் தர அரசியல் இயக்கமாக மாறிவிட்டதை நம் மக்கள் அனைவரும் அறிவார்கள். ஏகத்துவவாதிகளால் வளர்க்கப்பட்ட இவ்வியக்கம், அந்த ஏகத்துவக் கொள்கைதான் இதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனச் சொல்லி பாதை மாறியது.
அதிமுகவின் அரசியல் அலையில் சொற்ப வெற்றி பெற்றவர்கள் இவர்கள். தாங்கள் செய்த முதல் வேலையான  உணர்வு அலுவலக அபகரிப்பு முயற்சியில் படுதோல்வியடைந்து மக்கள் முன்பு  ஏற்கனவே பெயர் கேட்டு நிற்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் செய்த மற்றுமொரு காரியம் அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இயக்கமான தமுமுக, உலகம் முழுவதும் பொதுமக்களிடம் வசூல் செய்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகள் சீரியஸாக இருந்தால் அவர்களுக்கு பயன்படும் என்று நம்பித்தான் மக்கள் இதற்காக நிதிகளை வழங்கினார்கள்.


ஆனால் சீரியஸுக்கு பயன்படைய வேண்டிய ஆம்புலன்ஸை டிவி சீரியலுக்குப் பயன்படுத்தினால் என்னவாகும்?


ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் என்ற மெகா தொடரில்தான் இவர்களின் ஆம்புலன்ஸை நடிக்க வைத்துள்ளனர் இந்த மக்கள் இயக்கத்தினர். தஞ்சை மாவட்டம் பாண்டவாடையில் இயங்கி வரும் இந்த இயக்கத்தைச் சார்த்த ஒரு ஆம்புலன்ஸ்தான் டிவி சீரியலின் ஒரு காட்சியில் வளம் வருகிறது.


இந்தத் தொடரில் கதைப்படி ஒரு பிணத்தை ஏற்றி வந்து இறக்குவது போல வரும் ஒரு காட்சியில், மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் அனைத்து எழுத்துக்களையும் தார் மை பூசி அழிக்கப்பட்டு தான் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் பின்பக்க கண்ணாடிக் கதவில் தமுமுக என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை அவர்களால் அளிக்க முடியவில்லை போலும்.


மக்களிடம் இருந்து பெற்ற பணத்தின் மூலம் வாங்கப்பட்ட பொதுமக்களின் சொத்தினை டிவி சீரியலுக்கு வாடகைக்கு விடுவது என்ன நியாயம்? அதுவும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தினர் இந்த வேலையைச் செய்தால் நம் சமுதாய மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?


இவர்களின் போலி முகங்களை மக்கள் இனங்கண்டு இவர்களை முற்றாகப் புறக்கணித்து தனிமைப்படுத்தினால்தான், இவர்கள் நல்லது என நினைத்து செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் தண்டனையாகும்.


"உணர்வு" ஜூலை 8 - 16