ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! பாஜக!

,
கருணை அடிப்படையில் எனது உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியது உண்மைதான் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 10 வீட்டுமனைகளை தனது உறவினர்களுக்கு முதல்வர் எடியூரப்பா ஒதுக்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை மஜத குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் இது குறித்து எடியூரப்பாவிடம் கேட்டதற்கு,என் உடன்பிறந்த 2 சகோதரர்கள் இறந்து விட்டனர். அதேபோல, என் தங்கையின் கணவரும் இறந்துவிட்டார். கருணையின் அடிப்படையில் இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தின் வீட்டுமனைகளை ஒதுக்கினேன்.


10 பேருக்கு வீட்டுமனை ஒதுக்கியுள்ளதாக கூறுவதில் 6 பேர் மட்டுமே எனது உறவினர்கள். மற்றவர்கள் யார் என்பது குறித்து விவரம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.


சிந்திக்கவும்:
கருணை அடிப்படையில் உறவினர்களுக்கு கொடுத்தேன் என்று சொல்லும் போதே இவர் யோக்கிதை பல்லை இளிக்கிறது. இந்த பாசிச மதவாத பாரதிய ஜனதா கட்சியின் யோக்கிதை இப்படி இருக்க இவர்கள் தி மு க வை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. யார் வீட்டு சொத்தை யார் யாருக்கு எடுத்துக் கொடுப்பது.

கருணை உங்கள் சொந்தகாரர்கள் மீதுதான் வருமோ! ஏழை எளிய மக்கள் மீது வராதோ.
இவர் உறவினர்களை விட ஏழை எளிய மக்கள் எத்தனையோ பெயர் இருக்க,  இவர் உறவினரில் சிலர் இறந்தார்களாம் அவர்களுக்கு இவர் கருணை அடிப்படையில் தானம் கொடுத்தாராம்.

ஏன் எத்தனை ஏழை எளிய மக்கள் தினம் தினம் இறக்கிறார்கள் அவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டியதுதானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்கிற பழமொழி தான் நினைவுக்கு
வருகிறது. என்ன ஒரு அகம்பாவம் இவர்களுக்கு.