ஜூலை 05, அஹ்மதாபாத்:: 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றுகுவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர்.
இக்காலக் கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள்தாம் அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்கவேண்டும். ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன? ஆவணங்கள் வழக்கின் சட்டநடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.