தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வரவேற்றுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு என்று எத்தனையோ நலத்திட்டங்களை நிறைவேற்றி விட்டார். ஆனால் இந்த ராம கோபாலன் கண்ணுக்கு மாடு மட்டும்தான் தெரிகிறது.
மாடுகளை பராமரிக்க கால்நடை மருத்தவ மனைகள் ஒவ்வொரு ஊரிலும் கட்டப்பட வேண்டுமாம் அதன் மூலம் மாடுகளை நோய் இன்றி பாதுகாக்க முடியும் என்று சொல்கிறார். இவருக்கு மனிதர்களை பற்றி எந்த கவலையும் இல்லை.
இந்தியாவில் பஸ் இல்லாத, மின்சார வசதி இல்லாத, மருத்துவமனைகள் இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கிறது. அப்படி இருக்க அதை பற்றி வாயை திறக்க காணோம் இலவசமாக மாடு வழங்குகிறார் என்றதும் மாட்டுக்கு மருத்துவமனை வேண்டுமாம்.
இந்த மாடுகளை யாரும் கறிக்கடைக்கு விற்றுவிட கூடாதாம் அதை தடுக்க வேண்டுமாம். இவருக்கு அறிவு இருக்கிறதா அல்லது இவர் இவரது வர்ணாசிரமம் இவர் கண்களை மறைகிறதா? எந்த முட்டாளாவது பால் கறக்கும் பசுமாட்டை கறிக்காக வெட்டுவானா? என்று பசுமாடுக்கு வயதாகிறதோ அப்போது அதை வெட்டி உணவாக உண்பார்கள்.
ஆனால் வயதான மாட்டை வெட்ட கூடாது ஏன் என்றால்! மாடு தெய்வம் என்று வர்ணாசிரமத்தில் சொல்லப்பட்டுள்ளதே என்கிறார்! ராம கோபால ஐயரே நீங்கள் பசுமாட்டை சாபிடாமல், அதன் பாலையும், மூத்திரத்தையும் மட்டும் குடிபவராக இருக்கலாம் ஆனால் ஏழை எளிய மக்களின் சத்துணவாகிய மாட்டிறச்சியை அவர்கள் சாப்பிட கூடாது என்று தடுக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை.