மும்பை இன பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை!

,
ஜூலை 2, மும்பை: சிவசேனை தலைவர் பயங்கரவாதி பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதி பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.


இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.


இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார்.


இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.


சிந்திக்கவும்: 
பால்தாக்ரே சிவசேனை என்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். இது மராட்டியர் அல்லாத மற்ற மாநில மக்களுக்கு எதிரானது இயக்கம் மட்டும் அல்ல முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு இயக்கமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நடத்திய இன, மற்றும் மதக்கலவரங்கள் எண்ணில் அடங்காது. எந்த அரசும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியே வந்தது. இந்நிலையில் பீகார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.