ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

,
ஜூன் 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை . இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள்.

இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர் . இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள்.

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.