உணர்வு அலுவகம் தமுமுக வினரால் சட்ட விரோதமாக ஆக்ரமிக்கப்பட்டதைக் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆளும் கூட்டணி என்ற பம்மாத்து வேலை எடுபடவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராக வேலை செய்த தவ்ஹீத் ஜமாஅத் சொத்தையே ஆக்ரமிக்க முடியவில்லையே மற்றவர்களின் சொத்துக்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று தமுமுக கும்பல் இடிந்து போய் உள்ளது.
ஆனால் சாவியை தமுமுகவிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டாலும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைக்காததன் மூலம் காவல் துறையினர் அநீதி இழைத்துள்ளனர். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க நான்கு கட்ட போராட்டத்தை மாநில நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
01 - ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா–தொடர் முழக்கப் போர்ராட்டம் – நடத்துவது.
02 - சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது.
03 - நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது.
04 - உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது.
உணர்வு அலுவலகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராவீர்.
Source: www.tntj.net