ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

,
ஜூன் 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை . இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள்.

இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர் . இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள்.

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

பிற இயக்கங்களை விமா்சிப்பது சாரியானதா?

,

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் மமக வை கண்டித்து TNTJ தலைமையில் சென்னையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்.

,
கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி 28/06/2011 அன்று சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



சோதனையின்றி சொர்க்கமில்லை!

,
தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்கு தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீத்வாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்த ஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீத் அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும், ஆக்கிரமித்து நின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.
 
"உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது." [அல் குர்ஆன் - 2 : 214]

அந்த அளவுக்கு தவ்ஹீத்வாதிகள் பாதிக்கப்பட்டார்கள்; சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம், உதிரம் சிந்திய அவர்களின் காயத்திற்கு ஒட்ற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீத்வாதிக்கும் வேதனையே வாழ்க்கையானது.
 
தவ்ஹீத்வாதிகளுக்கு எதிர்ப்பலைகள், எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும் எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குக் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.
 
இதை இங்கு சொல்வதற்குக் காரணம், ஏகத்துவவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகி ஜவாஹிருல்லாஹ். "அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.


தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.
 
திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றனர்.
 
ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகிறார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒரு எம்.எல்.ஏ பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.
 
இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால் இவருக்கு நாம் சொல்லிக் கொள்வது, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்னிடம் வீர முழக்கமிட்ட மந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.

"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்" என்று (பிர்அவ்ன்) கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்த வனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்' என்று அவர்கள் கூறினார்கள்.” [அல் குர்ஆன் - 20 : 71,72]

தலையங்கம் ஏகத்துவம் ஜூன் 2011

ஆர்ப்பாட்டம்

,
கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.

நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.

தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.
உணர்வு அலுவலகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராவீர்.

அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.

மாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகிறது

,
கட்சியின் பெயரில் மாமாவைக் கொண்டவர்கள், தாங்கள் அரசியலில் ஜெயிப்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதேபோல செயலில் மாமாவைக் கொண்ட பொய்யன் சமாத் புரோக்கர்கள் எதையாவது எழுதி அண்ணன் ஜமாஅத்தை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று கண்டவர்கள் கழிக்கும் நாற்றமெடுத்த பொதுக்கழிப்பிடமான அவர்களது பொய்யம் சமாத் டிரஸ்ட் தளத்தில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.
உள்நாட்டு புரோக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வேலை பார்க்கும் அபுஜஹீலின் வாரிசுகளும் இணைந்து எதையாவது வாந்தி எடுத்து தருவதையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.

அடுத்தவன் கள்ளக்காதலியோடு ஜமாஅத் போனில் விடியவிடிய கடலை போட்டவர்கள் எல்லாம் விதவிதமான அட்வைஸ்களை அண்ணன் ஜமாத்துக்கு எதிராக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட கீழ்ப்பாக்கம் புகழ் அப்துல் முஹைமீனும் சேர்ந்து எதையாவது வாந்தி எடுத்து அதை பொய்யன் சமாத்துக்கு அனுப்பி வைக்க, அதை நக்கிப் பார்த்து இனிக்கிறதா புளிக்கிறதா எனச் சொல்லும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பொய்யன் வகையறாக்கள் தளம்.

இப்போது இவர்களுக்கு என்ன வேண்டும்?

அண்ணன் ஜமாத் போராட்டம் அறிவித்தால் உங்களுக்கு எங்கடா பத்திக்கிட்டு எரியுது அயோக்கிய புரோக்கர் பயலுகளா என்று பேசி விடலாம்.

ஆனால் இவர்களும் நம் பெயர்தாங்கி சகோதரர்களாக இருப்பதால் அப்படி எல்லாம் பேச மாட்டோம்.

கொஞ்சம் நிதானமாகவே பேசலாம். உணர்வு அலுவலகத்தை மாமா ரவுடிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமுமுகவிற்கு மக்கள் தந்தை காசுகளை வைத்து வாங்கப்பட்ட கட்டிடத்தை அந்த மாமா ரவுடிக்கும்பல் ஆக்கிரமிக்கிறது. அவர்களை இந்த மாமா புரோக்கர் கும்பல் ஆதரிக்கிறது.

உதாரணமாக பொய்யன் அவர்களின் கள்ளக்காதலியிடம் நள்ளிரவு நேரங்களில் ஜமாத் போனிலிருந்து விடிய விடிய பேசிய சின்ன மன்மதன் கள்ள மைனர் அப்பாஸ் அவர்கள், பொய்யனின் கள்ளக்காதலியிடம் பேசியதனால் தான் பொய்யனால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அப்படி இல்லாமல் இருந்தால் அவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்திருப்பாரா?

இருந்திருப்பார். காரணம் உணர்வு அலுவலகம் இயங்கக்கூடிய கட்டிடம் 7 வட மரைக்காயர் தெரு கட்டிடம் அரசியலில் இறங்க மாட்டோம் என அல்லாவின் மீது சத்தியம் செய்து, தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக மட்டுமே தருவோம் என்று மக்களால் வழங்கப்பட்டது என தெளிவாகத் தெரிந்தும் கூட, அதை பதவிக்காக மாமா ரவுடி கூட்டம் ஆக்கிரமிக்கும் போது நியாயத்தின் பக்கம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. அதை நியாயப்படுத்தி பேசுகிறது பொய்யனின் அயோக்கிய கூட்டம்.

அப்படியானால் நம் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் பொய்யனின் கள்ளக்காதலியுடன் ஜமாத் போனில் கடலை போட்டது போல, கண்டு கொள்ளாமல் தான் விட்டிப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அடுத்தவன் இடத்தை ஒரு ரவுடிக்கூட்டம், ஊழல்கூட்டம் ஆக்கிரமிக்கும் போது அது தன்னுடைய எதிரி என்பதால் அதை நியாயப்படுத்தினால் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?

அண்ணன் ஜமாத்காரன் ஒருவருசத்து போராட்டம் அறிவிச்சா உங்களுக்கு என்ன? ஒரு வாரத்துக்கு வச்சா உங்களுக்கு என்ன? உங்கள் தொழிலைமட்டும் கவனிச்சா போதுமப்பா!

பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

* பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, களவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?

வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?

கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.

வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி

,
கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.

நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.

இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.

ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.

ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.

அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.

அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.


குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .
   
Source: www.tntj.net

சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06.2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்ட தியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார்கள்.


அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் எவ்வாறு கலந்து கொள்வது கூடாதோ அது போன்று பெண்வீட்டு விருந்து வைக்கப்படும் திருமணங்களிலும கலந்து கொள்வது கூடாது. அதுவும் ஒர் பித்அத்துதான். அனாச்சாரம் தான் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

பிறகு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஏன் புதிதாக வாங்கும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்காக பதிவு செய்ய வேண்டும்? என்பதையும் டிரஸ்டாக பதிவு செய்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் கொள்கையற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்கள்.

பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவரும், கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினருமான முஹம்மது நாசிர் அவர்கள் முபாரக் பள்ளிவாசல் அருகில் வாங்கப்பட்ட இடத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில்தான் ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூல் செய்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து நான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்யவில்லை என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதையும் நிருபித்தார்.

மேலும ஸைஃபுல்லாஹ் ஹாஜா இடம் வாங்குவதற்காக வசூல் செய்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டால் இந்த உண்மைகள் அவருடைய வாயினாலே வெளிப்படும் என்றும் அவர் அவ்வாறு வெளியிடுவாரா? என்றும் பொதுக் குழு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.

01-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிரானதாகும்.

02-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம் நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை (சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.

03-இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும் பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும் ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது மிகப் பெரும் மோசடியாகும்.

04-நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும் வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும் ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில் படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய் சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம், குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத் சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.

05-புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும் துரோகமாகும்.

06-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்.

07-ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும் திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக் கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

08-கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

09-கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.

10-மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல், கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.

11-மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத் தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

12-மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும் போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.

13-கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல் இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான் ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.

14-சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

15-தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக் பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ் வெளிப்படுத்தினார்.

மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.

எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுது.

Source: www.tntj.net

உணர்வு அலுவலக மீட்புப் போராட்டம் – தயாராவீர்!

,
உணர்வு அலுவகம் தமுமுக வினரால் சட்ட விரோதமாக ஆக்ரமிக்கப்பட்டதைக்  குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஆளும் கூட்டணி என்ற பம்மாத்து வேலை எடுபடவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராக வேலை செய்த தவ்ஹீத் ஜமாஅத் சொத்தையே ஆக்ரமிக்க முடியவில்லையே மற்றவர்களின் சொத்துக்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று தமுமுக கும்பல் இடிந்து போய் உள்ளது.
 
ஆனால் சாவியை தமுமுகவிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டாலும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைக்காததன் மூலம் காவல் துறையினர் அநீதி இழைத்துள்ளனர். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க நான்கு கட்ட போராட்டத்தை மாநில நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

01 - ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா–தொடர் முழக்கப் போர்ராட்டம் – நடத்துவது.
02 - சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது.
03 - நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது.
04 - உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது.
 
உணர்வு அலுவலகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராவீர்.


Source: www.tntj.net

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பது யார்?

,
ஊளையிடும் உத்தமர்கள்

கடந்த மே மாதம் 28,29 ஆகிய தேதிகளில் டி.என்.டி.ஜே சார்பாக ஊட்டியில் நடைபெற்ற தர்பியா முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்றுவிட்டனர். இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமிலே உணர்வு ஊழியர்களும் பங்கெடுப்பதற்காகச் சென்று விட்டனர். யாருமே இல்லை என்பதை அறிந்து கொண்ட மம கட்சியின் ரவுடிகள் இரவோடு இரவாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி அப்புறப்படுத்தி விட்டு அதை எம்.எல்.ஏ அலுவலகமாக ஆக்கி விட்டனர். சமுதாய துரோகி ஜவாஹிருல்லா வெற்றியடைந்தவுடன் செய்த முதல் சமுதாய பணி இது தான்.

அன்றைக்கே பூட்டை உடைத்து கயவர்களிடமிருந்து அந்த அலுவலகத்தை மீட்காமல் வழக்கம்போல டி.என்.டி.ஜேவினர் தங்களின் ஆமை வேக பணிகளைத் துவங்கிவிட்டனர். இவர்களின் ஆமை வேகம் இந்த ரவுடிக்கும்பலுக்கு மிக சாதகமாக போய் விட அவர்களின் ஆட்டம் இன்னும் அதிகரித்து விட்டது.

முதலில் தமுமுக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை விட, தமுமுக யாருக்குச் சொந்தம் என்பதை இங்கே நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மற்ற விசயங்களை இன்னும் எளிதாக விளங்கி விடலாம். கிட்டத்தட்ட 1980 களில் இருந்தே ஊருக்கு ஊர் அடிவாங்கி அரிவாள் வெட்டு வாங்கி தவ்ஹீத் கொள்கையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட பிஜே மற்றும் அவருடன் இன்றைக்கு உண்மையான ஏகத்துவக் கொள்கை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இருக்கும் தாயீக்கள் கூட்டம்.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993.., இதைக் கண்டித்து தமிழகத்தில் மதுரையில் 4000 முஸ்லிம்களைத் திரட்டி ஒரு எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இந்த சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக சுனாமி வசூலில் பிணைத்தைத் தோண்டித் தின்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிஜே. 
ஒரு அமைப்பு இல்லாமல் போராடினால் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்ற யோசனை, அன்றைக்கு பாமகவின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்களால் கொண்டுவரப்பட்டு அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்து சும்மா வைத்திருந்த தமுமுக இவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிஜேவின் பேச்சுக்கள் தீப்பொறியாய் பறந்தது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி படையெடுத்தார்கள். அப்போதெல்லாம் இந்த சமுதாய துரோகி ஜவாஹிருல்லா எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. தமுமுக கடும் வளர்ச்சி கண்டது. தவ்ஹீதின் வளர்ச்சிக்காக மட்டுமே உள்நாடு வெளிநாடுகளில் இருந்து மக்கள் தங்கள் செல்வங்களை அள்ளித் தந்தனர். குறிப்பாக பிஜே என்ற ஒருவர் செய்யும் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு மட்டுமே மக்கள் தந்த காசுகளில் தான் தமுமுகவிற்கு பல சொத்துக்கள் வாங்கப்பட்டன.

அந்த வகையில் ஏகத்துவ பிரச்சார அமைப்பான தமுமுகவுக்கு அலுவலகம் வேண்டும் என மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்டது தான் 7 வடமரைக்காயர் தெரு அலுவலகம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாங்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என துவக்கப்பட்ட தமுமுகவுக்கு தான் மக்கள் காசு தந்தார்களே தவிர இன்றைய கட்டப்பஞ்சாயத்து கழுசடைகளுக்கு அந்த அலுவலகம் வாங்க மக்கள் காசு தரவில்லை.

இன்றைய தமுமுக ஆபிஸூக்கு கட்டிடம் வாங்க துரோகி ஜவாஹிருல்லா மட்டும் கையெழுத்திடாமல் பிஜேவிடமும் கையெழுத்து வாங்கி தான் கடிதங்களை உலகம் முழுவதும் பரப்பினார்கள் தமுமுகவினர். அன்றைக்கு தமுமுகவிற்கு தலைவராக இருந்த போலிவாத்தியார் ஜவாஹில்லா மட்டும் கையெழுத்திடாமல், பிஜேவிடம் பிச்சையெடுத்து கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கடிதத்தை அவர்களே இப்போது பரப்பி வருகிறார்கள்.

அரசியல் இல்லாத சமுதாயப் பணிகள் களை கட்டியது தமுமுகவில்.மேடையில் ஏறி சீன் போடும் வேலையை மட்டுமே மேற்படி சுனாமிவாலாக்கள் செய்ய, இந்த இளிச்சவாயர் பிஜே இவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய பேச்சுக்களின் மூலம் மக்களைக் திரட்டும் பணியை மேற்கொண்டார்.

பிஜேவுடன் அன்று முதல் இன்று வரை இருக்கும் தவ்ஹீத் தாயீக்களும் தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் தமுமுகவை நோக்கி திரள ஆரம்பித்தார்கள். கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்த இந்த துரோகி ஜவாஹிருல்லா, இதைப் பயன்படுத்தி எப்படியாவது அரசியலில் இறங்க வேண்டும் என திட்டமிட்டார். இதை பிஜே விடம் சொல்ல, அவரோ வழக்கம் போல தவ்ஹீது, ஓரிறைக் கொள்கை, மறுமை சிந்தனை அப்படி இப்படி என அதே பல்லவியைப் பாட, இந்த அயோக்கியர்கள் எப்படியாவது மக்கள் சக்தியை பயன்படுத்தி அரசியல் பதவிகளைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் உள்ளே தனி ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் சென்னையில் பீஸ் (Peace) வகையறாக்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலே சிறப்பு விருந்தினராக இந்திய அமெரிக்கத் தூதர் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திற்கு தமுமுக தொண்டர்கள் ஒரு நாளைக்கு 70 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு அமெரிக்க தூதரை தங்கள் உயிர் கொடுத்தும் காவல் காப்பார்கள் என இந்தத் துரோகி ஜவாஹிருல்லா அவர்களிடம் ஒப்பந்தம் போட, வழக்கம் போல இந்த பிஜே சும்மா இருக்காமல், அதெப்படி பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க தூதருக்கு நம் மக்களை வைத்து பாதுகாப்பு கொடுக்கலாம் என கேள்வி கேட்க ஆரம்பித்தார். இப்படித்தான் எதையாவது உளறி பிஜே இயக்கங்களை உடைப்பார். அமெரிக்க தூதருக்கு இஸ்லாமியன் காவல் காப்பது தானே மரபு. அதைக் கண்டு கொள்ளாமல் பொத்திக் கொண்டு இருக்க முடியாமல் இந்த பிஜே கேள்வி கேட்க வந்தது விரிசல்.

இயக்கம் உடைந்தது. இரு தரப்பினரும் ஊருக்கு ஊர் சென்று தங்கள் நியாயங்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தமுமுகவைக் கைப்பற்றிய கட்டப்பஞ்சாயத்து கம்பெனிகள் செய்த பிரச்சாரத்தை இந்த பிஜே வகையறாக்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் ஓரளவிற்கு இன்றைக்கு தமுமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்படியாக இயக்கம் பிரியும் போது மூன்று தளங்களைக் கொண்ட வடமரைக்காயர் தெரு அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் தமுமுக அலுவலகமும், இரண்டாவது தளத்தில் உணர்வு அலுவலகமும் இயங்கி வந்தது. இந்தக் கட்டிடமும் உணர்வு பத்திரிகையும், முஸ்லிம் டிரஸ்ட்க்கு சொந்தமானது. அதன் ஆயுள் கால சேர்மனாக பீஜே இருக்கிறார்.

வெளிநாட்டில் உள்ள சகோதரர்களிடம் தமுமுக கட்ட்ட நிதிக்காக உதவி கேட்ட போது அவர்கள் உதவுவதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை விதித்தார்கள். தமுமுக ஜனநாயக் அமைப்பு என்பதால் அதில் கொள்கை கெட்டவர்கள் கூட பொறுப்புக்கு வந்து விட முடியும். நாங்கள் அளிக்கும் நிதியில் வாங்கிய சொத்து தவ்றான காரியத்துக்கு பயன்படும் நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தமுமுகவை தெரியாது. பீஜேயை மட்டும் தான் தெரியும். எனவே பீஜேயை ஆயுள் கால சேர்மனாக போட்டு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் அதன் பெயரில் மட்டும் தான் சொத்து வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். 

அதன் படி தான் முஸ்லிம் ட்ரஸ்ட் அமைக்கப்பட்ட்து. பீஜே உயிருடன் இருக்கும் வரை அவர் தான் தலைவராக இருக்க வேண்டும். அவரது மரணத்துக்குப் பிறகு தான் உறுப்பினர்கள் கூடி வேறு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனற அடிப்படியில் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அவர்கள் அஞ்சியது போல் கெட்டவர்கள் இயக்கத்தின் பதவிக்கு வந்து விடுவார்கள் என்பது வேறு வகையில் நிறைவேறியது. அதாவது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே கேடு கெட்ட அயோக்கியர்களாக மாறிப்போனார்கள்.

பணம் கொடுத்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வட மரைக்காயர் தெருவில் இருந்து தமுமுக வெளியேறுவது தான் தார்மீக ரீதியில் செய்ய வேண்டிய காரியாமாகும். அன்றைக்கே இந்த காவாலி ரவுடிகளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைப் பூட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்தே இருக்காது. அன்றைக்கு அவர்களை வெளியேற்றினால் இவர்கள் சொத்துக்காகத் தான் இயக்கம் நடத்தினார்கள், இது ஏகத்துவ பிரச்சாரத்தை பாதித்து இருக்கும் என இன்றைக்கும் விளக்கம் கொடுக்கிறார் பிஜே. ஆக இந்த பிரச்சனை உருவாக காரணமே பிஜே தான். எதையுமே அப்போதே செய்து முடித்து களையெடுக்கும் வேலைகளைச் செய்யாத பிஜே, அன்றைக்கு தமுமுகவை இழந்தார், இன்றைக்கு உணர்வு அலுவலகத்தை இழந்து நிற்கிறார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக அரசியலில் இறங்க மாட்டோம் என முழங்கி மக்களிடம் காசு வசூல் செய்த கட்டிடம் இன்றைக்கு அரசியல் தலைமையகமாகத் திகழ்கிறது. அப்பாவி மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்ட கட்டிடம் இன்றைக்கு கட்டப்பஞ்சாயத்துகளின் தலைமைக் கழகமாகத் திகழ்கிறது.

காசுகளை வாங்கிக் கொண்டு நீதியை குழிதோண்டிப் புதைத்து விட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது கட்டப்பஞ்சாயத்து கழகம். ஹைதர் அலி வக்ஃப் சேர்மனாக இருந்த போது சென்னை மாயாஜால் என்ற திரையரங்கம் வக்ஃப் சொத்தினை ஆக்கிரமிக்கிறது. இது பரவலாக அந்தப் பகுதி மக்களால் பேசப்படுகிறது. இதை அறிந்த ஹைதர் அலியும், ஜவாஹிருல்லாவும் தங்களின் பர்சனல் காரில் அந்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைக்குச் செல்கின்றனர். பேரம் படிகிறது. அன்றைக்கே சிறப்பு அருசுவை உணவுகள் இருவருக்கும் பரிமாறப்படுகிறது. வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு இந்த துரோகிகள் வந்து விட்டனர். நாட்கள் பல ஆகியும் அந்த நிலம் மீட்கப்படவில்லை.

இதை அறிந்த டிஎன்டிஜே களமிறங்கி கானத்தூரில் கடும் தர்ணாவை நடத்தி அந்த இடத்தை மீட்டது. இது போல வக்ப் சொத்துக்கள் தமிழகம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிவாசல் சொத்தாக இருக்கும் கடைகள் காலி செய்யப்பட்டு அங்கே தமுமுகவினருக்கு ஆயுட்கால வாடகையில்லா குத்தகை விடப்படுகிறது.

தமுமுகவின் இது போன்ற அராஜகங்கள் கொஞ்சமா நஞ்சமா?

இது போலத்தான் ஆக்கிரமிக்கப்பட்டது உணர்வு அலுவலகமும். உணர்வு அலுவலகம் பூட்டிக்கிடந்ததாம். உண்மை தான். அந்த இரண்டு நாட்கள் பூட்டித் தான் கிடந்தது. இரவோடு இரவாக நுழைந்த சுனாமி திருடர்கள் அதன் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தனர். இந்த சுனாமி பிணந்திண்ணிகளிடமிருந்து அந்தக் கட்டிடம் விரைவில் மீட்கப்படும். இன்ஷா அல்லாஹ்..,

அப்போது தெரியும் சத்தியம் யார் பக்கம் என்று??

சுனாமி பிணந்திண்ணிகளின் பினாமிகள் தங்கள் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ஏதோ தாங்கள் தான் உத்தமர்கள் என்பதைப் போல எழுதிவருகிறார்கள்.

அவர்களிடம் பொதுமக்களாகிய நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி..,
இவர்கள் வாதப்படியே 4 வருடங்களாக பூட்டிக்கிடந்த அலுவலகத்தை இவர்கள் ஏன் இத்தனை காலமும் ஆக்கிரமிக்கவில்லை?இரண்டு நாள் தர்பியா சென்ற நாளில் மட்டும் இதை ஏன் ஆக்கிரமித்தார்கள்?
இஸ்லாமிய இனத்துரோகி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆனதும் இதை ஆக்கிரமிக்கிறார்கள் என்றால்,இது சொல்ல வரும் பாடம் என்ன?
இத்தனை நாள் தங்கள் வீரத்தைக் காட்டாமல் பொட்டையாக கிடந்த இவர்கள் எம்.எல்.ஏ ஆகி விட்டதும் இப்படி ஆண்மைத் தனமாக மாறுவது ஏன்?
•   எம்.எல்.ஏ என்பது முதலமைச்சருக்கு அடுத்த பதவியா?
அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தீர்ப்பு என்ன?
அரசியல் இல்லாத மார்க்க சமுதாய பணி மட்டுமே செய்யும் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வசூல் செய்து வாங்கப்பட்ட தமுமுகவின் முழுமையான கட்டிடம் நியாயப்படி யாருக்கு சேர வேண்டும்?

சிந்திக்கும் மக்களாக நம்மை இறைவன் படைத்திருக்கிறான். இது ஒவ்வொன்றையும் சிந்தித்து நீங்களே பதில் சொல்லுங்கள் நியாயவான் யார் என்று?

மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோ லிங்குகளைப் பார்க்கவும்