பீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா..?

,
கேள்வி : பீஜேயை விட பலம் வாய்ந்தவர் அப்துல்லா என்றும் அதனால் தான் அவருக்கு எல்பின்ஸ்டன் அரங்கத்திலேயே அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்கருக்கு அங்கே கூட்டம் கூடவில்லை அப்துல்லாவுக்குத் தான் கூட்டம் கூடியது என்றால், ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா? என்று ஒரு அறிவுச் சுடர் கேள்வி கேட்டுள்ளதே?
-மசூது, கடையநல்லூர். 

எல்பிடன் அரங்கத்தில் பீஜேவை அனுமதிக்கவில்லை அதனால் அப்துல்லா தான் பலம் வாய்ந்தவர் என எழுதியிருக்கிறார். அப்துல்லா பலம் வாய்ந்தவரா பீஜே பலம் வாய்ந்தவரா என்று பார்க்க இது என்ன மல்யுத்தக் களமா? கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவில்லாமல் இப்படி கீழ்த்தரமான குறுக்கு புத்தி கொண்டு அலையும் அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி அல்லக்கை தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதித் தள்ளுகிறான்.

அப்படியே பேரா.அப்துல்லா அண்ணனை விட பலம் வாய்ந்தவர் என்று சொல்வதால் அவருக்கு என்ன பெருமை, பீஜேவுக்கு என்ன சிறுமை. அப்படியே தான் இருக்கட்டுமே! பீஜை விட அப்துல்லா பலம் வாய்ந்தவர் என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. காரணம் இந்த உலகத்திலே எல்லாருமே அல்லாஹ்வின் அடிமைகளே! அதிலே பலம் வாய்ந்த அடிமை என்றெல்லாம் கிடையாது.

பேரா.அப்துல்லாவைப் பொருத்தவரை அவர் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர். தர்ஹாவில் இருந்து யாராவது பேச அழைத்தால் அங்கே போய் தர்ஹாவைத் தாக்கி பேசமாட்டார். தர்ஹாவிற்கு எதிரி கும்பல் அழைத்தால் அங்கே போய் தர்ஹாவிற்கு எதிராக பேசுவார். இதற்கு காரணம் அவர் இன்னமும் சரியான இஸ்லாத்தினை புரிந்து கொள்ளாததே!

அதனால் தான் பொய்யன் வகையறாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு அலைகிறார். இதே எல்பிடன் அரங்கத்தில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சினிமாவில் இருக்கும் துணை நடிகன் ஒருவனுக்கு அங்கே நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கும். உடனே பார்த்தீர்களா? பீஜேவுக்கு கிடைக்காத அனுமதி ஒரு துணை நடிகனுக்கு கிடைத்து விட்டது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ கேவலத்தனமோ அதைவிடக் கேவலத்திலும் கேவலத்தைத் தான் பொய்யன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறது. பீஜே தவ்ஹீதைச் சொல்லப்போனதால் அரங்கம் மறுக்கப்படுகிறது. அதல்லாத வேறு எதைச் சொன்னாலும் அந்த அரங்கின் கதவு தானாய் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்துல்லாவின் பின்னால் கேமிராவைத் தூக்கிக் கொண்டு அலைந்து படம் பிடித்து சீடி யாவாரம் செய்யும் இந்த பிராடுகள் நித்யானந்தாவின் சீடியைக் கூட வைத்து வியாபாரம் செய்வார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் என்பதை மிகச் சிறிய பொடி எழுத்தில் போட்டுக் கொண்டு மீடியா வேல்ர்டு என்பதை பெரிதாகப் போட்டுக் கொண்டு பேரா.அப்துல்லாவின் நிழலில் ஒழிந்து கொண்டு சென்று அவரை வைத்து சீடியாக்கி யாவாரம் செய்யும் இந்த யாவாரிகளை மக்கள் இனங்கண்டு ஒழித்து விடுவதற்கு முயல வேண்டும்.

ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த முட்டாள் முஹைமீன் கேட்டு இருக்கிறான். அட லூசுப் பயலே! ஜூலை 4 மாநாடு கூட்டம் பீஜேவுக்கு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்காக கூடிய கூட்டமா? அவன் பைத்தியக்காரன் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஜூலை 4 மாநாட்டிற்கு கூடிய கூட்டம் ஹாரூனுக்கும் கூடிய கூட்டம் அல்ல, பீஜேவுக்கும் கூடிய கூட்டம் அல்ல! சமுதாய மக்கள் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக கூடிய கூட்டம் என்று சின்னப் பிள்ளைக்குக் கூட அறிவுகெட்ட அப்துல்முஹைமீனுக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

கேள்வி: ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக ஒரு பெரிய பில்டப் போட்டு தாக்குகிறார்களே? இது குறித்த தங்களின் விளக்கம் என்ன?
- இறைநேசன், இளையான்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் இதஜடியில் இணைந்து விட்டார் என ஏகப்பட்ட பில்டப் செய்திகள் பொய்யன் தளத்தில் பொங்கி வழிவதைக் காணலாம். தலைப்பு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில் உள்ளே சென்று படித்துப் பார்த்தால் பொய்யன் கூட்டம் வழக்கமான தங்களின் பைலாவான பொய் சொல்லுதல் மோசடி செய்தல் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது மாநில வர்த்தகரணி என்று வெளியே போட்டு விட்டு உள்ளே அவர் பாண்டிச்சேரி மாநில வர்த்தகரணி என்று போட்டு இருக்கிறார்கள்.

சரி பரவாயில்லை. அந்த பாண்டிச்சேரி வர்த்தகரணி செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையின் மீது, அல்லது இதன் தலைவராக இருக்கும் பீஜேவின் மீது பலமான குற்றச்சாட்டை வைத்து அதற்கு ஒழுங்கான விளக்கம் தரப்படாததால் தான் அவர் ததஜவில் இருந்து விலகினாரா? அல்லது இவர்கள் கொள்கை மாறி விட்டார்கள், மாமா ரவுடிகளைப் போல அரசியல் பதவிகளுக்காக சமுதாய நலனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்து விட்டு மனம் வெறுத்து விலகிச் சென்றாரா?

அப்படி விலகிச் சென்றவரை அரவனைத்து விட்டதா இதஜடி?
இந்த வர்த்தகரணிச் செயலாளர் ததஜவில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? தெரியுமா? இதைச் சொன்னால் ஒட்டு மொத்த சமூகமும் கொதித்து விடும்.
பொய்யர்கள் ஆசைப்பட்டால் அவர் மீது சுமத்தப்பட்டு நிறுபிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆக ததஜவில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட ஒருவர் இதஜடியில் இணைவது பெருமையா? கேவலமா என்பதை அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அந்த நபர் ததஜவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு பின்னர் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைத் தூக்கி வீசினார்கள். கடைசியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவர்களை ஒன்றினைத்து நடத்தப்படும் கழிவுகளின் கூடாரம் இதஜடியில் இவர் இப்போது சேர்ந்திருக்கிறார்.

இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் இவர் முஸ்லீம் லீகில் இருந்து தான் இதஜடியில் இணைந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும்.

இன்னும் உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிருத்தவ மதத்திற்கு வருகிறார். அதன்பின்னர் கிருத்துவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் முந்தைய நிலை கிருத்தவ மதம் என்பது தான் உண்மை.

ததஜவில் இருந்து முஸ்லீம் லீக்கிலிருந்து சென்று அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது இந்திய கழிவுகள் ஜமாத்தில் சேர்ந்திருப்பதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது இவர்களுக்கு?
 
ஆக இவர்களின் நோக்கமே ததஜவை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல இந்த பொய்யர்கள் கூட்டம் காலம் காலமாய் நம்மிடம் அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
 
நன்றி http://poyyantj.blogspot.com

அருள்மிகு ரமளானும்! அறியாமை அகற்றும் விளக்கங்களும்!

,
எல்லாம் வல்ல அல்லாஹ் ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை இறக்கியருளினான். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)

ரமளான் மாதம் முழுவதும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் அம்மாதத்தில் புனிதமிகு குர்ஆன் அருளப்பட்டதால் தான் என்ற அழகிய பதிலை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

களங்கப்படும் இந்த கண்ணிய மாதம்

அல்குர்ஆன் அருளப்பட்ட இந்த அற்புத மாதத்தை நோன்பு நோற்று கவுரப்படுத்துங்கள் என்று கூறுகின்றான் அறிவுமறை வழங்கிய அல்லாஹ்! ஆனால் இந்த மாதத்தை கவுரவப்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாயம் களங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில் கூட பட்டப்பகலில் ஹோட்டல்களில் முஸ்லிம்கள் பகிரங்கமாக டீ குடித்தல், உணவருந்துதல் போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. வீதிகளில் சென்றால் வீடுகள் தோறும் சினிமா பாடல்கள், டி.வி., வீடியோ காட்சிகள் என்றும் போல் இன்றும் நிரம்பி வழியும் தியேட்டர்கள், மேக மூட்டத்தைப் போன்று பீடி சிகரெட் புகைப் படலங்கள்!

ஆயிரம் ரமளான் வரட்டும், நான் வீட்டை விட்டு அசைய மாட்டேன் என்று ஐங்காலத் தொழுகைக்காக பள்ளிக்கு வராமல் பாவத்தைத் தொடர்கதையாக்கும் ஆண் ஜென்மங்கள்! வீட்டிலிருந்து கொண்டே இந்த ரமளான் மாதத்திலும் தொழுகையைத் தொடராத நமது தாய்க்குலங்கள்!

நாம் பட்டினி கிடந்து நோன்பு நோற்றால் போதும், படைத்தவனைத் தொழ வேண்டியதில்லை என்று அல்லாஹ்வின் ஒரு கட்டளையை ஏற்று மறு கட்டளையைப் புறம் தள்ளும் கூட்டம் ஒரு புறம்! பொருளாதாரம் வழங்கப்பட்டும் புனித மிகு ரமளானில் கூட பூட்டிய பெட்டிகளிலிருந்து ஏழைகளுக்கு வழங்கத் துணியாத கஞ்சர்கள் மறு புறம்! ரமளான் வந்தும் சாராயம், பழரசம், டாஸ்மாக் சரக்குகளை அடிக்கும் சாட்ஜாத்கள் இன்னொருபுறம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆயிரம் அவலங்களை! இந்த அவலங்கள் எதைக் காட்டுகின்றன? அல்குர்ஆன் எனும் வேதம் இறங்கிய இந்தப் புனித மாதத்திற்கும் மற்ற மாதத்திற்கும் முஸ்லிம்களிடம் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

எப்படி முஸ்லிம்கள் அல்லாத மக்கள் வாழும் பகுதியில் ரமளானுக்கு எந்த மதிப்பும் இருக்காதோ அதுபோலவே முஸ்லிம்கள் மிகைத்து வாழும் பகுதிகளும் காட்சியளிக்கின்றன. வேதம் இறங்கிய இந்த ரமளான் மாதத்திற்கு நாம் அளிக்கக்கூடிய கண்ணியத்தைப் பார்த்து மாற்று மதத்தினரும் நோன்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் நம்முடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இறைத்தூதரின் எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, “ஆமீன், ஆமீன், ஆமீன்” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, “ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். “எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, “ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். “எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, “ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்:இப்னு ஹிப்பான், மவாரிதுல்லம்ஆன், முஸ்னத் அபீயஃலா, முஸ்னத் பஸ்ஸார், தப்ரானீ கபீர்

இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும்.

இனி ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பது பற்றியும் நடைமுறையில் உள்ள பித்அத்துக்களையும் பார்ப்போம்.
நிய்யத் ஒரு விளக்கம்

இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று இந்த நோன்பு எனும் வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்கு எடுத்துக்காட்டு தான் நிய்யத். ரமளான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல் தோறும் வழங்கப்படும் நோன்பு நேர அட்டைகளிலும், பள்ளிவாசல் போர்டுகளிலும் நோன்பு வைக்கும் நிய்யத் என்று தலைப்பிட்டு ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா என்று வாயால் சொல்லி வைக்கப்படும் இந்த நிய்யத்தின் பொருளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக அமைந்திருக்கும்.

“இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக”
இதுதான் மேற்படி நிய்யத்தின் பொருள்.

இந்த வருடத்து ரமளான் மாதத்தில் தான் நாம் பிறை பார்த்து முடிவு செய்கின்றோம். ரமளான் மாதத்தில் ஃபர்ளான நோன்பைத் தான் பிடிக்க முடியும். ரமளான் மாதத்தில் நஃபிலான நோன்புகளையா நோற்க முடியும்? “அதாவாக” என்று கூறுகின்றார்கள். ஒரு கடமையை அதற்குரிய நேரத்தில் செய்வதற்கு அதா என்று பெயர். காலம் தவறி செய்வதற்கு களா என்று பெயர். ரமளான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு அதாவாகத் தானே ஆகும்? இதை வாயால் சொல்லவும் வேண்டுமா?

“நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக” என்கின்றனர். பிறைக் கணக்குப்படி எப்போது பிறையைப் பார்க்கின்றோமோ அப்போதே அந்த நாள் ஆரம்பமாகி விடுகின்றது. இப்படியிருக்க நாளை பிடிக்க என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?

நிய்யத் என்றால் எண்ணுதல், தீர்மானித்தல் என்று பொருள். இது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இத்தகைய நிய்யத்தை “செய்கிறேன்’ என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

உளூ, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் நிய்யத் என்ற பெயரில் வாயால் கூறப்படுவது மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: முஸ்லிம் 3243

இந்த ஹதீஸைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, நிய்யத் என்ற பெயரில் மேற்கண்ட வாசகங்களைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்பதாக தீர்மானிப்பது அவசியம்.

ஸஹர் நேரம்

நிய்யத் என்ற பெயரில் சில வாசகங்களைக் கூறுவதோடு நிற்காமல், நிய்யத் செய்து விட்டால் எதையும் சாப்பிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். நிய்யத் செய்தல் என்பதே இல்லை எனும் போது நிய்யத் செய்து விட்டால் சாப்பிடக் கூடாது என்று தடை போடுவது எந்த விதத்திலும் சரியாகாது.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி); நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நோன்பு கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இதனால் இந்த நேரத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து எழுபவர்கள் சுப்ஹ் நேரத்திற்கு அரை மணி நேரம் இருந்தால் கூட அன்றைய நோன்பை நோற்காமல் வீணாக்குகின்றனர். இது பெரும் குற்றமாகும். குர்ஆன், ஹதீஸைப் பற்றிய தெளிவு இல்லாததால் ரமளான் மாதத்தின் கடமையான நோன்பை இழந்து அல்லாஹ்விடம் குற்றவாளி ஆகும் நிலை ஏற்படுகின்றது.

ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடிப்பவர்கள் ஒரு புறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும்.

ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மூன்று மணிக்குள்ளாக ஸஹரை முடித்து விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு பாங்குகள்

பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தை அறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்தி பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகின்றது.

“நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி); நூல்: புகாரி 621

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, “அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காக ஏறுவார்” என்று இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.

இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாங்குகளை இன்று நம்மில் யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியை நமது ஜமாஅத்தினர் அனைவரும் நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

நோன்பு துறத்தல்

சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி); நூல்: புகாரி 1954

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி); நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து 5 அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பை முறிக்கும் காரியங்கள்

உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய காரியங்கள் தான் நோன்பின் நேரமான ஃபஜ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை ஆகும்.

வேண்டுமென்றே இக்காரியங்களை யாரேனும் செய்தால், ஒரு அடிமையை உரிமை விடுதல் அல்லது இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்றல் அல்லது 60 ஏழைகளுக்கு உணவழித்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும். (பார்க்க புகாரி 1936)

இவை தவிர பல்வேறு காரியங்கள் நோன்பை முறிக்கக் கூடியவை என்ற பெயரில் மக்களிடம் நடைமுறையில் உள்ளன.

1. குழந்தைகளை முத்தமிடுதல், 2. இரத்தக் காயங்கள் ஏற்படுதல், 3. எச்சிலை (சளியை) விழுங்குதல், 4. முடி வெட்டுதல், 5. வாசனை சோப்பு போடுதல், 6. நறுமணம் பூசுதல், 7. வாந்தி எடுத்தல், 8. நோன்பு நேரத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல், 9. உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல், 10. பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல், 11. மருத்துவத்திற்காக ரத்தம் வழங்குதல், 12. ஆற்றில் முங்கிக் குளித்தல், 13. காது, மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே செல்லுதல், 14. நோன்பு துறந்த பின் ஓதும் துஆவைக் கூறுதல், 15. நோய் நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல், 16. கண், காது போன்றவற்றுக்கு மருந்து போடுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது.

தவறான நம்பிக்கைள்

யாராவது இறந்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தவர்கள் வலுக்கட்டாயமாக நோன்பை முறித்து விடுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு வேண்டுமென்றே நோன்பை முறித்தால் மேலே நாம் கூறியுள்ள பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம் அல்லது தண்ணீர் கொண்டு நோன்பு துறப்பதை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இதற்கு மாற்றமாக உப்பைக் கொண்டு நோன்பு துறக்கும் வழக்கம் உள்ளது. இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நோன்பு நோற்று, பித்அத்தான காரியங்களையும் மூட நம்பிக்கைகளையும் விட்டு விலகி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோமாக!

(நோன்பு பற்றிய முழுமையான விளக்கங்களுக்கு மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பு என்ற நூலைப் பார்வையிடுக!) : தொடர் – 3

தஸ்பீஹ் தொழுகை
-எம்.ஐ. சுலைமான்

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி நான்கு நூற்களில் இடம்பெற்றுள்ளதையும் அவை அனைத்திலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெற்றுள்ளார் என்பதையும் கடந்த இதழில் அரபி மூலத்துடன் கண்டோம். இதில் இடம்பெறும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவர் நம்பகமானவரா? ஆதாரத்திற்கு ஏற்றுக்கெள்ளும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவரா? என்பதைப் பற்றி ஹதீஸ்கலை வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் காண்போம்.
அரபி 5 மூஸா பின் உபைதா என்பவர் நல்லவர் எனினும் அவரின் நினைவாற்றல் (குறைவு) காரணத்தினால் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கியுள்ளனர். (நூல்: திர்மிதீ 1078)
அரபி 6 மூஸா பின் உபைதா அர்ரபதீ என்பர் அபூ அப்துல் அஜீஸ் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டவர். இவரின் நினைவாற்றல் காரணமாக யாஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் மற்றும் இவரல்லாதவர்களும் விமர்சித்துள்ளனர். மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கப்பட்டவர். யஹ்யா பின் ஸயீத் மற்றும் இவரல்லாதவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ3262)

இவரைப்பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ அவர்கள் கேட்டபோது…
அரபி 7 முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக் கொள்ளமாட்டேன் என இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள். (நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம் 1, பக்கம் 309)

அபூராஃபிவு (ரலி) அவர்கள் வழியாகப் பதிவு செய்த மற்றொரு இமாம் பைஹகீ அவர்கள் தனது அஸ்ஸுனுல் குப்ரா என்று நூலில் இவர் இடம்பெறும் வேறொரு செய்தியைப் பற்றி கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

அரபி 8 இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார். அவர் பலவீனமானவராவார். (நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)
இமாம் புகாரி அவர்கள் தனது தாரிகுல் கபீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

அரபி 9 மூஸா பின் உபைதா பின் நஷீத் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர். இவ்வாறு அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள். அந்நாட்களில் (அவர் வாழும் நாட்களில்) அவரை விட்டும் நாங்கள் தவிர்ந்து வந்தோம் என்று கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். (தாரிகுல் கபீர் பாகம் 7, பக்கம் 291) இதே கருத்தை இமாம் புகாரீ, அவர்களின் இயற்றிய இன்னொரு நூலான அத்தாரிகுஸ் ஸகீரிலும் குறிப்பிட்டுள்ளார்கள் (பாகம் 2, பக்கம்93)
மூஸா பின் உபைதா என்பவரை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆவார்கள். அவர்களின் விமர்சனத்தைக் காண்போம்.
அரபி 10 எனது கருத்துப்படி மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகளை பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் – இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

அரபி 11 மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகள் எழுதப்படாது. அவரிடமிருந்து எந்த ஒன்றையும் நான் வெளியிடமாட்டேன். அவரின் ஹதீஸ்கள் மறுக்கப்படவேண்டியவை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் – இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

அரபி 12 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மூலம் மூஸா பின் உபைதா என்பவர் அறிவித்த ஹதீஸை கடந்து சென்ற போது இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இது மூஸா பின் உபைதா என்பவரின் சரக்கு என்று கூறிவிட்டு தனது வாயை மூடி கோணலாக்கியவாறு தனது கையை உதறினார்கள். மேலும் இவர் ஹதீஸை (முறைப்படி) மனனம் செய்தவரில்லை என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் – இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

அரபி 13 மூஸா பின் உபைதா, இஸ்ஹாக் பின் அபீஃபர்வா, ஜுவைபிர், அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் ஆகிய நான்கு நபர்களின் செய்திகள் எழுதப்படாது என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: லுஅஃபாவுல் உகைலீ பாகம் 3, பக்கம் 161)

அரபி 14 மூஸா பின் உபைதா அர்ரபதீ, அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் அல்இஃப்ரிகீ ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதமாட்டேன் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: ஹாகிம், பாகம் 2, பக்கம்251)

அரபி 15 அவருடைய ஹதீஸ் என்னிடத்தில் எந்த மதிப்பும் அற்றது என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறினார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி…
அரபி 16 உறுதியான நினைவாற்றல் கோட்டைவிடுபவர் எதற்கு அடிப்படை இருக்காதோ அப்படிப்பட்ட செய்திகளை யூகமாகக் கொண்டு வருவார். நம்பகத்திற்குப் பாத்திரமானவர்களின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அடிப்படையற்ற செய்தியை அறிவிப்பார். எனவே தகவல் என்ற கோணத்தில் இவரை ஆதாரமாகக் கொள்ளுதல் நீங்கிவிடுகிறது. அவர் தன் அளவில் சிறந்தவராக இருந்தாலும் சரியே (நூல்: மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 235)
இமாம் இப்னு மயீன் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி…

அரபி 17 மூஸா பின் உபைதா பலவீனமானவர். (நூல்: தாரீக் இப்னு மயீன் பாகம் 1, பக்கம் 199)

அரபி 18 இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது என்று இப்னுமயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)

அரபி 19 மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)
மூஸா பின் உபைதா என்பவரைப் பற்றி இன்னும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அரபி 20 மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவராவார். இவர் மறுக்கப்படவேண்டிய ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அலீ பின் அல்மதீனீ அவர்களும் ஹதீஸ்துறையில் வலிமை வாய்ந்தவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அபூஹாத்தம் அவர்களும் பலவீனமானவர் என்று ஒரு சந்தர்பத்திலும் இன்னொரு சந்தர்பத்தில் நம்பகமானவர் இல்லை என்றும் இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

அரபி 21 இமாம் அஹ்மத் அவர்களிடம் மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால் பாகம் 29, பக்கம் 112) வளரும் இன்ஷாஅல்லாஹ்…

கேள்வி பதில்

? ஒரு ஹதீஸின் தரத்தை இனம் கண்டு தான் பின்பற்ற வேண்டுமா? அவ்வாறு ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆராயும் போது, ஒரு அறிவிப்பாளரை அதிகமானவர்கள் நல்லவர் என்று கூறி, ஒருவர் மட்டும் அவரைப் பற்றி குறை கூறியிருந்தால் எப்படி முடிவு செய்ய வேண்டும்? மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கலாமா?
-எஸ். ஜஹபர் சாதிக், கருக்கங்குடி

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை ஹதீஸ்கள் என்கிறோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையை ஆய்வு செய்து அவற்றில் ஆதாரப்பூர்வமானவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக முழுமையான விளக்கத்திற்கு ஏகத்துவத்தில் இடம் பெறும் “ஹதீஸ் கலை’ என்ற தொடரைப் பார்வையிடுக!

ஒரு அறிவிப்பாளரைப் பற்றி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் நல்லவர் என்று கூறியிருந்து, ஒரேயொரு ஹதீஸ் கலை அறிஞர் மட்டும் அந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறி, அதற்குச் சரியான காரணத்தையும் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இங்கு மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. அந்த அறிவிப்பாளரைப் பற்றிய மோசமான விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் பலவீனமானவர் என்ற முடிவுக்கே வர வேண்டும். ஏனெனில் நல்லவர் என்று விமர்சனம் செய்தவர்களுக்கு அவரது குறையைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஒருவரது குறையைப் பற்றித் தெரியாத போது அவரை நல்லவர் என்றே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஒருவரை மனன சக்தி குறைவானர் என்றோ, பொய்யர் என்றோ ஒரு ஹதீஸ் கலை அறிஞர் விமர்சனம் செய்கின்றார் என்றால் அவரது குறையை நன்கு தெரிந்து தான் விமர்சனம் செய்கின்றார். எனவே இந்த விமர்சனத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும்.

? இஸ்லாத்தில் மொழி, நிறம் போன்றவற்றிற்கு எந்த மகத்துவமும் இல்லை. ஆனால் குர்ஆனை அரபியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்கிறார்கள். மற்றபடி அவரவர் தாய்மொழியில் ஓதினால் நன்மைகள் இல்லை என்கிறார்கள். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும்.
-சாதிக்கா முஹம்மது, முரார்பாத்

அல்லாஹ்வுடைய எழுத்தில் ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்து; லாம் என்பது ஒரு எழுத்து; மீம் என்பது ஒரு எழுத்து என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); நூல்: திர்மிதீ 2835

இந்த ஹதீஸின்படி குர்ஆனை அதன் மூல மொழியான அரபு மொழியில் ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் நமது தாய்மொழியில் குர்ஆனின் பொருளை உணர்ந்து படிப்பதற்கு நன்மையே இல்லை என்று எண்ணி விடக் கூடாது.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

இதுபோன்று குர்ஆனைப் பற்றி சிந்தித்து படிப்பினை பெறுமாறு வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவை அனைத்துமே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். (அல்குர்ஆன் 35:29)

அல்லாஹ்வின் வேதத்தைப் படிப்போர் நஷ்டமில்லாத வியாபாரத்தைச் செய்வதாக இந்த வசனம் கூறுகின்றது.

செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: புகாரி)
எனவே அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கின்றோம் என்ற எண்ணத்துடன் திருக்குர்ஆனை நமது தாய்மொழியில் படித்தாலும் அதற்கு நிச்சயம் நன்மை உண்டு.

ஆனால் அரபு மொழியில் படித்தால் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதை நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். மற்ற மொழிகளில் படிப்பதற்கு இதுபோன்று குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.

பொதுவாக எந்த ஒரு நூலாக இருந்தாலும் அது இயற்றப்பட்ட மூல மொழிக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எத்தனை மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த நூலின் தனித்தன்மை மாறாமல் இருப்பது மூல மொழியில் மட்டும் தான். சாதாரண நூற்களுக்கே இந்த நிலை இருக்கும் போது திருக்குர்ஆனுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை அளிப்பதற்கு அதிகமான முகாந்திரம் உள்ளது.

ஏனெனில் திருக்குர்ஆன் என்பது சாதாரண மனித வார்த்தைகள் அல்ல. அவை அல்லாஹ்வின் வார்த்தைகள். அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே நாம் ஓதுவதற்கென்று சிறப்பு நன்மைகள் இருப்பதை அரபு மொழிக்கு உள்ள சிறப்பு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அரபு மொழியில் எதைப் படித்தாலும் நன்மை என்று இஸ்லாம் கூறவில்லை. திருக்குர்ஆனைப் படிப்பதற்கு மட்டுமே நன்மை என்று கூறுவதால் இது திருக்குர்ஆனுக்குரிய சிறப்பு தானே தவிர அரபு மொழிக்குரிய சிறப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதுவதற்குப் பதிலாக குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டும் அரபு மொழி தான், இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய வாசகம் தான். அரபு மொழிக்கு சிறப்பு இருப்பதாக இருந்தால் எப்படிக் கூறினாலும் இந்த நன்மை கிடைக்க வேண்டும். ஆனால், குல் அவூது பிரப்பின்னாஸ் என்பதற்குத் தான் குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்குமே தவிர, குல் அஸ்தயீது பிரப்பின்னாஸ் என்று கூறுவதற்கு அந்த நன்மை கிடைக்காது. எனவே குர்ஆன் ஓதுவதற்கு உள்ள சிறப்பு அரபு மொழிக்கு உள்ள சிறப்பு அல்ல! அது இறைவனின் வார்த்தைகளை, வஹீயை அப்படியே கூறுவதற்கான சிறப்பு என்பதை விளங்கலாம்.

“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது “நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக “உனது ரசூலையும் நம்பினேன்’ என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக” என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி); நூல் : புகாரி 247

இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதிலிருந்து மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, யாருடைய வார்த்தைகள் என்பது தான் நன்மையைத் தீர்மானிக்கின்றன என்பதை அறியலாம்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)

இஸ்லாத்தில் மொழி, இனம், குலம், நிறம் ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதற்கு இவ்வசனமே போதுமான சான்றாகும்.

? சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை பிரகாசம் நீடிக்கின்றது என்று ஹதீஸ் உள்ளது. பிரகாசம் என்றால் ஒளி என்று அறிவோம். இதன் நன்மைகள் என்ன? அரபியில் ஓதினால் தான் இந்த நன்மைகளை அடைய முடியுமா? தமிழில் படித்தாலும் நன்மை கிடைக்குமா? விளக்கம் தரவும்.
ஏ. மாலிக், கோவை.

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி); நூல் : ஹாகிம்